சாலை விபத்தில் டி.என்.பி.எல். சிமெண்டு ஆலை ஊழியர் படுகாயம்

சாலை விபத்தில் டி.என்.பி.எல். சிமெண்டு ஆலை ஊழியர் படுகாயம் அடைந்தார்.

Update: 2021-06-03 18:51 GMT
வேலாயுதம்பாளையம்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 32). இவர் புகளூர் டி.என்.பி.எல் சிமெண்டு ஆலையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வந்து கொண்டிருந்தார்.  வேலாயுதம்பாளையம் மூலிமங்கலம் சாலை பிரிவில் திரும்பும் போது, கரூரில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் ஒன்று செந்தில் மோட்டார் சைக்கிளில் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட செந்தில் படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீ்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகானந்தவடிவேல் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்