திருச்சி மாவட்டத்தில் புதிதாக 823 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் நேற்று 823 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-06-03 18:37 GMT

திருச்சி, 

திருச்சி மாவட்டத்தில் நேற்று 823 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 869 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 659 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பினர். 11 ஆயிரத்து 478 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதேநேரம் கொரோனாவுக்கு நேற்று திருச்சி மாவட்டத்தில் 11 பேர் பலியாகி உள்ளனர். 

திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட 280 படுக்கைகளும், ஆக்சிஜன் இல்லாத 746 படுக்கைகளும், தீவிர சிகிச்சை பிரிவில் 47 படுக்கைகளும் என மொத்தம் 1,073 படுக்கைகள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்