நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

Update: 2021-06-03 18:31 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழைபெய்தது.
பரவலாக மழை
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக புதுச்சத்திரம் பகுதியில் 51 மி.மீட்டர் மழைபதிவானது. 
 நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு (மி.மீட்டரில்) வருமாறு:-
புதுச்சத்திரம்-51, ராசிபுரம்-48, சேந்தமங்கலம்-37, குமாரபாளையம்-36, கொல்லிமலை-25, எருமப்பட்டி-10, மங்களபுரம்-10, திருச்செங்கோடு-4, மோகனூர்-3, நாமக்கல் கலெக்டர் அலுவலகம்-1.
மழைநீர் தேங்கியது
நாமக்கல் நகரை பொறுத்தவரையில் நேற்று முன்தினம் மழை பெய்யவில்லை. நேற்று காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பிற்பகல் 2.30 மணி அளவில் திடீரென மழை கொட்ட தொடங்கியது. இந்த மழை சுமார் ¾ மணி நேரம் பெய்தது.
இதனால் சாலையோரங்கள் மற்றும் பள்ளமான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதை பார்க்க முடிந்தது. இதேபோல் கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக செயல்பட்டு வரும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி முன்பும் மழைநீர் தேங்கி நின்றதை காண முடிந்தது.

மேலும் செய்திகள்