தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
பனைக்குளம்
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து த.மு.மு.க. தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. உத்தரவின்படி ராமநாதபுரத்தில் த.மு.மு.க. சார்பில் மாநில செயலாளர் சமுல்லாகான் ஆலோசனையின் பேரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் நகர் தலைவர் அப்துல்ரகீம் தலைமையில் நகர் நிர்வாகிகள் முன்னிலையில் மருத்துவ அணி செயலாளர் யாசர் அராபத், முகம்மது தமீம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பனைக்குளம் த.மு.மு.க. அலுவலக வளாகத்தில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் முகம்மது ஹசன்சீனி, அன்வர்அலி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பனைக்குளம் கிளைத்தலைவர் ரசீத் அகமத், பொருளாளர் சாதிக், ம.ம.க. செயலாளர் சபீல் அகமது, மருத்துவ அணி செயலாளர் ஹபீப் கமால்,அப்துல்அலி, முக்தார்அலி அமீர், மைதீன் உள்பட பலர் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்துகொண்டனர்.