மணல் கடத்திய 4 டிராக்டர்கள் பறிமுதல்

மணல் கடத்திய 4 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-06-03 18:26 GMT
தரகம்பட்டி
கடவூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள ஏரிகளில் மணல் திருட்டு நடப்பதாக பாலவிடுதி போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. அதன்பேரில் பாலவிடுதி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 4 டிராக்டர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மாவத்தூர் ஏரியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 4 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்