கொரோனாவுக்கு போக்குவரத்து ஊழியர் பலி

கொரோனாவுக்கு போக்குவரத்து ஊழியர் பரிதாபமாக இறந்தார்

Update: 2021-06-03 18:04 GMT
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 1949 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 204 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
மேலும் சிவகங்கையை சேர்ந்த 2 பேர் கொரோனா தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 
இதில் சிவகங்கை அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்த தமிழ்ச்செல்வன்(வயது 53) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார். இவர் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று காலத்தில் தமிழ்ச்செல்வன் சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் வாகன ஒருங்கிணைப்பாளராக இருந்தார். மருத்துவ கல்லூரிக்கு வெளியூர்களிலிருந்து பணிக்கு வரும் செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இயக்கப்படும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை கண்காணிப்பது, தேவைப்படும் இடங்களுக்கு பஸ்களை இயக்குவது ஆகிய பணிகளுடன் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனியார் பள்ளி வாகனங்களில் மருத்துவமனைக்கு அழைத்து வருவது உள்ளிட்ட பணிகளில் அவர் ஈடுபட்டார். இதனால் இந்த முறையும் தமிழ் செல்வன் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் வாகன ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்தார். இந்நிலையில் தமிழ்ச்செல்வனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து அவரை சிவகங்கையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

மேலும் செய்திகள்