கோவை மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 81 பேர் பாதிப்பு
கோவை மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 81 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 24 பேர் குணமாகி வீடு திரும்பினர்.;
கோவை
கோவை மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 81 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 24 பேர் குணமாகி வீடு திரும்பினர்.
கருப்பு பூஞ்சை நோய்
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை அதிதீவிர பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது ஒருபுறம் தாக்குதல் தொடுக்கும் வேளையில் தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோய் பரவி வருகிறது.
வடமாநிலங்களில் இந்த நோய்த்தொற்று பரவலாக பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது தமிழகத்திற்கும் கால்பதித்து மக்களை வெகுவாக பாதித்து வருகிறது.
இந்த நோய் பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
81 பேர் பாதிப்பு
இந்த நோய் பாக்டீரியா, வைரஸ் போன்ற காற்று மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள பூஞ்சை கிருமிகள் மூலம் நாசி வழியாக உடலுக்குள் சென்று தொற்றை ஏற்படுத்துகின்றன.
இந்த தொற்று முதல் முதலில் கண்களை பாதிக்கிறது. உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இந்த நோய் தொற்று தாக்குகிறது.
தற்போது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சீராய்டு மருந்து எடுத்து குணமடைந்தவர்களை இந்த நோய் எளிதில் தாக்குகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை 81 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
24 பேர் குணம் அடைந்தனர்
அதில் 24 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 57 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.