குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதை கண்டித்து த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதை கண்டித்து த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது.

Update: 2021-06-03 17:36 GMT
திருவாரூர்,

கொரோனா பேரிடர் காலத்திலும் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதை கண்டித்து த.மு.மு.க. சார்பில் திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் நடுத்தெரு த.மு.மு.க. கிளை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் செய்யது இபுராகிம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் நவாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமூக இடைவெளியை கடை பிடித்து மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்