தர்மபுரி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி போலீசார் விசாரணை
தர்மபுரி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி போலீசார் விசாரணை
தர்மபுரி:
தர்மபுரி அருகே காரும். மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2 பேர் பலி
தர்மபுரி அருகே உள்ள சோலைகொட்டாய் பகுதியில் நேற்று இரவு ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் சென்று கொண்டு இருந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்கள் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள்.
போலீசார் விசாரணை
ஆனால் விபத்தில் இறந்தவர்கள் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்ற விவரம் உடனடியாக தெரியவரவில்லை. இதையடுத்து அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----