ஊரடங்கு உத்தரவை மீறி திறந்த 2 மளிகைக்கடைமரப்பட்டறைக்கு சீல்

ஊரடங்கு உத்தரவை மீறி திறந்த 2 மளிகைக்கடைமரப்பட்டறைக்கு சீல்

Update: 2021-06-03 17:16 GMT

திருக்கோவிலூர்

கண்டாச்சிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சாம்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் பில்ராம்பட்டு மற்றும் ஆலம்பாடி ஆகிய கிராமங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பில்ராம்பட்டு கிராமத்தில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த ராமசாமி மகன் மாரிமுத்து என்பவரின் மளிகைக் கடை, ஆலம்பாடி கிராமத்தில் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் ரமேஷ் என்பவரின் மளிகைக் கடை, இன்னொரு கிராமத்தில் அருணாசலம் மகன் கணபதி என்பவருக்கு சொந்தமான மரப்பட்டறை ஆகியவற்றை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் கீழ்வாலை கிராமத்தில் திறந்திருந்த மளிகைக் கடை, பில்ராம்பட்டு கிராமத்தில் ஒர்க்‌ஷாப் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.





மேலும் செய்திகள்