நாகையில் இருந்து ராஜபாளையத்திற்கு அரவைக்காக 1,000 டன் நெல்
நாகையில் இருந்து ராஜபாளையத்திற்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்படடது.
நாகப்பட்டினம்:
நாகையில் இருந்து ராஜபாளையத்திற்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்படடது.
கொள்முதல் நிலையம்
நாகை பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அரவைக்காக மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் வெளி மாவட்டங்களுக்கும் நெல் மூட்டைகள் அவரைக்காக சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்படுகிறது.
1,000 டன் நெல்
நாகையில் இருந்து ராஜபாளையத்திற்கு அரவைக்காக 1,000 டன் சன்னரக நெல்சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதை முன்னிட்டு நாகை பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் லாரிகளின் மூலம் நாகை ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 வேகன்களில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ெரயில் ராஜபாளையத்துக்கு புறப்பட்டுச் சென்றது.