7 பேர் உயிரை பறித்த கொரோனா

தேனி மாவட்டத்தில் மேலும் 7 பேர் உயிரை கொரோனா பறித்தது.

Update: 2021-06-03 16:41 GMT
தேனி:

481 பேருக்கு தொற்று

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்து 849 ஆக உயர்ந்தது.

இந்த வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 528 பேர் நேற்று குணமாகினர். பாதிக்கப்பட்டவர்களில் 5 ஆயிரத்து 471 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 66 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

7 பேர் சாவு

இந்நிலையில் கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த 76 வயது முதியவர், 65 வயது முதியவர், பெரியகுளம் பகுதியை சேர்ந்த 47 வயது ஆண், கீழக்கூடலூரை சேர்ந்த 63 வயது பெண், தேனி பகுதியை சேர்ந்த 63 வயது முதியவர், திண்டுக்கல்லை சேர்ந்த 55 வயது ஆண் ஆகிய 6 பேர் உயிரிழந்தனர். 

அதுபோல் தேனி பகுதியை சேர்ந்த 63 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்