தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உருவப்படத்துக்கு அமைச்சர் கீதாஜீவன் மலர்தூவி அஞ்சலி

தூத்துக்குடியில் தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உருவப்படத்துக்கு அமைச்சர் கீதாஜீவன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

Update: 2021-06-03 16:25 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உருவப்படத்துக்கு அமைச்சர் கீதாஜீவன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
பிறந்த நாள் விழா
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், முன்னாள் தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்துக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ஆட்டோ தொழிலாளர்கள் 50 பேருக்கு அரிசி, காய்கறி தொகுப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்