ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் கோளாறு. ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஜோலார்பேட்டை ரெயில் ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
ஜோலார்பேட்டை
என்ஜினில் கோளாறு
கேரள மாநிலம் ஆலப்புழையில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்திற்கு ஜோலார்பேட்டை ரெயில்நிலையம் வழியாக ஆழப்புழை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று மாலை திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட்பாரத்தில் மாலை 4.50 மணியளவில் வந்து நின்றது. அதன் பிறகு சிறிது நேரம் கழித்து சிக்னல் கிடைத்ததும் ரெயில் புறப்பட தாயாரானது.
அப்போது அந்த ரெயில் என்ஜின் இயங்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ஜோலார்பேட்டை ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் ரெயில்வே அதிகாரிகள், மெக்கானிக் பிரிவு ஊழியர்களை உடனடியாக வரவழைத்தனர்.
ஒரு மணி நேரம் தாமதம்
அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடியும் என்ஜின் பழுதை சரிசெய்ய முடியவில்லை. இதனால் ரெயில்வே அதிகாரிகள் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து மாற்று என்ஜின் வரவழைத்து அதன் மூலம் ஒரு மணி நேரம் தாமதகாக மாலை 5.10 மணியளவில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. இதனால் ரெயில் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.