தேவூர் அருகே கிராமங்களில் கொரோனா: சாலையில் முள் மரங்கள் போட்டு அடைப்பு
தேவூர் அருகே கிராமங்களில் கொரோனா தொற்று காரணமாக, சாலையில் முள் மரங்கள் போட்டு அடைக்கப்பட்டு உள்ளது.
தேவூர்:
தேவூர் அருகே காவேரிபட்டி ஊராட்சி வட்ராம்பாளையம், ஒக்கிலிப்பட்டி பகுதிகளில் 20-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதியின் முக்கிய வீதிகள் அடைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் வட்ராம்பாளையம் பகுதியில் அதிகளவில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே அப்பகுதியின் முக்கிய வீதிகள், சாலைகளில் மக்கள் முள் மரங்கள் போட்டு முழுவதும் அடைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக வைத்துள்ளனர்.