தென்காசியில் கொரோனாவுக்கு மேலும் 9 பேர் பலி
தென்காசியில் கொரோனாவுக்கு மேலும் 9 பேர் பரிதாபமாக இறந்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 309 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதுவரை 23 ஆயிரத்து 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 19 ஆயிரத்து 20 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 3 ஆயிரத்து 703 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன் உள்பட 9 பேர் இறந்தனர். இதுவரை 351 பேர் இறந்துள்ளனர். கொரோனா பரவலை தடுப்பதற்காக வீடுகள் தோறும் பரிசோதனை செய்யும் பணி மும்மரமாக நடந்து வருகிறது.