கஞ்சா கடத்திய 5 பேர் கைது
கடையத்தில் கஞ்சா கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடையம்:
கடையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மெயின்ரோட்டில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சாம்பவர்வடகரை அருகே உள்ள வேலாயுதபுரம் அண்ணாநகர் காலனியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் சதீஷ் (வயது 21), பாலச்சந்திரன் என்பவரது மகன் மனோஜ் (23), லிங்கம் என்பவரது மகன் மணிகண்டன் (22) ஆகியோர் என்பதும், அவர்கள் 3 பேரும் கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் மந்தியூரை சேர்ந்த வினோத் (25), சோமசுந்தரம் (21) ஆகியோர் கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் சரசைய்யன் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.