50 குடும்பங்களுக்கு காய்கறிகள் தொகுப்பு
செங்கோட்டையில் 50 குடும்பங்களுக்கு காய்கறிகள் தொகுப்பு வழங்கப்பட்டது.;
செங்கோட்டை:
செங்கோட்டை நகரத்தில் வேளாண்மை துறை சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனம் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து இதன்மூலம் பாரத் கல்வி குழும தலைவரும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான மோகனகிருஷ்ணன் சார்பில் 50 குடும்பங்களுக்கு அனைத்து காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பைகள் ஜேசிஸ் கிளப் மூலமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கிளப் தலைவர் ராமசுப்பிரமணியன், செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.