செங்கோட்டையில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

செங்கோட்டையில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-02 21:23 GMT
செங்கோட்டை:
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கோட்டை மேலூர் பள்ளிவாசல் தெரு, கீழத்தெரு பள்ளிவாசல் தெரு, பம்புஹவுஸ் ரோடு ஆகிய இடங்களில் த.மு.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகி முஹிலாஷா தலைமை தாங்கினார். முபாரக், வாவாபக்ருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக இடைவெளியை கடைபிடித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்