ஈரோட்டில் மத்திய அரசை கண்டித்து த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் மத்திய அரசை கண்டித்து த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2021-06-02 20:57 GMT
குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 13 மாவட்டங்களில் குடியுரிமை கணக்கெடுப்பை நடத்துவதற்கு உத்தரவிட்ட மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஈரோடு சங்குநகர் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஏ.சித்திக் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் அமீர், துணைச்செயலாளர் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியாவில் கொரோனா 2-வது அலை பாதிப்பு அதிகமாக பரவியுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், அந்த அரசாணையின்படி 13 மாவட்டங்களில் குடியுரிமை கணக்கெடுப்பு மற்றும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் போன்றவர்களை கணக்கெடுக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இளைஞர் அணி செயலாளர் சாகுல் அலாவுதீன் மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்