மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

ராதாபுரம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2021-06-02 20:25 GMT
ராதாபுரம்:
ராதாபுரம் அருகே உள்ள வைய கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ஆனந்த இசக்கியப்பன் (வயது 25). இவர் வடக்கன்குளம் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் தெற்கு வேப்பிலாங்குளத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக ஆனந்த இசக்கியப்பன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த சம்பவம் குறித்து ராதாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்