ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, காரியாபட்டி, பரளச்சி, ஆவுடையாபுரம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தினர் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகரில் மாவட்ட தலைவர் முகமது இப்ராஹிம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 5 இடங்களிலும் நடந்த ஆர்ப்பாட்டங்களில் 95 பேர் கலந்து கொண்டனர்.