கோவில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

கோவில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2021-06-02 18:38 GMT
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம், சேங்கல்மலை அடிவாரத்தில் சொர்ணபைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதே போல் நன்செய்புகளூர் மேகபாலீஸ்வரர் கோவில், மண்மங்கலம் புது காளியம்மன்  கோவிலில் உள்ள பைரவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் யாரும் கோவில்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதேபோல் தோகைமலை அருகே ஆர்டிமலை மலை மீது அமைந்திருக்கும் விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு மஞ்சள், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. 
இதேபோல் நொய்யல் புன்னம்சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாதர் கோவிலில் காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்பட பல்வேறு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
லாலாபேட்டை அடுத்த கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 

மேலும் செய்திகள்