சாராயம் காய்ச்சிய 4 பேர் கைது
சாராயம் காய்ச்சிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கரூர்
கரூர் வாங்கல் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, குப்புச்சிபாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் (வயது 50), ஜெகதீஷ் (24) ஆகிய இருவரும் குக்கரில் சாராயத்தை காய்த்து விற்பனைக்காக பாட்டிலில் ஊற்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் கரூர் மாயனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சேவகன் ஊர் பகுதியை சேர்ந்த முருகானந்தம் (25), மணிகண்டன் (27) ஆகிய 2 சேர்ந்து 50 லிட்டர் சாராய ஊறல் விற்பனைக்காக போட்டு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.