தம்பிசெட்டிப்பட்டி சேவாகிராம் பஸ் நிறுத்தம் அருகில் புளியமரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
தம்பிசெட்டிப்பட்டி சேவாகிராம் பஸ் நிறுத்தம் அருகில் புளியமரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மொரப்பூர்:
மொரப்பூர் அருகே உள்ள தம்பிசெட்டிப்பட்டி சேவாகிராம் பஸ் நிறுத்தம் அருகில் இருந்த பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று சாலையில் நேற்று அதிகாலை அடியோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அரூர்-மொரப்பூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் ஜெயசங்கர், உதவி பொறியாளர் பாஸ்கரன் மற்றும் சாலை பணியாளர்கள் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் சாலையின் குறுக்கே விழுந்த புளியமரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.