கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 480 பேருக்கு கொரோனா; 5 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 480 பேருக்கு கொரோனா புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-02 18:09 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை அறிவிப்பின் படி நேற்று மாவட்டத்தில் கொரோனாவால் 480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 648 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 827 பேர் நேற்று குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 29 ஆயிரத்து 188 பேர் குணமாகி வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.
மாவட்டத்தில் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 4 ஆயிரத்து 252 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த 37 வயது ஆண், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த 37 வயது நபர் மற்றும் 65 வயது மூதாட்டி உள்பட 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்