காட்பாடியில் ரெயிலில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
காட்பாடியில் ரெயிலில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
காட்பாடி
காட்பாடி வழியாக செல்லும் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வேலூர் பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று மாலை அவர் ஊழியர்களுடன் காட்பாடி ரெயில் நிலையத்தில் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் அவர்களும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் சோதனை நடத்தினர். அப்போது பெட்டிகளில் ஆங்காங்கே இருக்கைகளின் கீழே சிறு சிறு மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி முட்டைகளை போலீசாரும், வருவாய்த்துறையினரும் பறிமுதல் செய்தனர். பின்னர் ரேஷன் அரிசி மூட்டைகள் வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.