திருவாரூரில் மளிகை பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் பணி பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

திருவாரூரில் மளிகை பொருட்களை வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்று வழங்கும் பணியை பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2021-06-02 17:51 GMT
திருவாரூர்,

கொேரானா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.

ஊரடங்கு காரணமாக வணிகர் சங்கங்களுடன் இணைந்து மளிகை பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் பணி தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு மளிகை பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் பணி நேற்று தொடங்கியது. பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. மளிகை பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உடனிருந்தார்.

30 வார்டுகள்

அப்போது பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ., திருவாரூர் வர்த்தகர் சங்கத்துடன் இணைந்து தற்போது 7 வாகனங்களில் மளிகை பொருட்கள் 30 வார்டுகளுக்கு சென்று வீடு, வீடாக வழங்கப்படுகிறது என கூறினார். நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் பாலச்சந்திரன், தாசில்தார் நக்கீரன், சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கணேசன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரகாஷ், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில், வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன், நகராட்சி ஆணையர் பிரபாகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் இருந்தனர்.

மேலும் செய்திகள்