கொரோனாவுக்கு தாய் பலி-அதிர்ச்சியில் மகன் சாவு
கொரோனா தொற்றுக்கு தாய் பலியானார். அதிர்ச்சியில் அவரது மகனும் இறந்தார்.
திருமயம், ஜூன்.3-
திருமயம் அருகே கொரோனா தொற்றுக்கு தாய் பலியானார். அதிர்ச்சியில் அவரது மகனும் இறந்தார்.
உதவியாளர்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நச்சாந்துபட்டி பகுதியை சேர்ந்தவர் நசீர் முகமது (வயது 45). இவர் அதே பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
நசீர் முகமதுடன், அவரது தாயார் முகமது அம்மாள் (68) என்பவரும் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நசீர் முகமது, முகமது அம்மாள் ஆகியோருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நசீர்முகமது குணம் அடைந்து வீடு திரும்பினார்.
தாய், மகன் சாவு
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகமது அம்மாள் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தை கேள்விபட்ட நசீர் முகமது கதறி அழுதார். அப்போது, திடீரென்று அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.