சாக்கோட்டை போலீஸ் சரகம் புதுவயல் பங்களா ஊருணி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த சிவநாதன் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மொத்தம் 100 கிராம் எடையுள்ள 18 கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சிவநாதன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.