வேலூரில் இரட்டை குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

வேலூரில் இரட்டை குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2021-06-02 17:23 GMT
வேலூர்-

இளம்பெண் தற்கொலை

வேலூர் தோட்டப்பாளையம் சோலாபுரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி இந்துமதி (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. 1 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இந்துமதி மனவேதனையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இளம்பெண் இந்துமதி தூக்குப்போட்டு கொண்டார். இதைப்பார்த்த குடும்பத்தினர், அப்பகுதி மக்களின் உதவியோடு அவரை மீட்டு வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இந்துமதி உயிரிழந்தார்.

உதவி கலெக்டர் விசாரணை 

இதுகுறித்து வேலூர் வடக்குப் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் இந்துமதியின் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, இந்துமதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்துமதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் மேல் விசாரணை நடத்தி வருகிறார். இரட்டை குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்