மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், முதல்-அமைச்சருக்கு 1000 தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம்
தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் முதல்-அமைச்சருக்கு 1000 தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி, ஜூன்:
கொரோனா பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மே மாதத்துக்கான மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி மாநகர மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 1000 தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கி தபால் அட்டையை எழுதி பெட்டியில் போட்டு தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் விஜயகாந்த், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.