விதிகளை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு அபராதம்
ஆற்காட்டில் விதிகளை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.;
ஆற்காடு
ஆற்காட்டில் விதிகளை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்க வருகிற 7-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. மளிகை பொருட்களை பொதுமக்களின் இருப்பிடத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஆற்காடு தாசில்தார் காமாட்சி மற்றும் வருவாய் துறையினர் ஆற்காடு நகர் பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது அரசு விதிகளை மீறி கடைகளை திறந்து நேரடியாக பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும் முக கவசம் அணியாமல் இருந்த கடை உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.