கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க உறுப்பினர்கள் 2,500 பேருக்கு கொரோனா நிவாரண உதவி
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க உறுப்பினர்கள் 2,500 பேருக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.
கோவில்பட்டி, ஜூன்:
கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் சங்கத்தின் உறுப்பினர்கள் 2,500 பேருக்கு 15 கிலோ அரிசி, 1 லிட்டர் சமையல் எண்ணெய், 10 கிலோ பலசரக்கு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தனியார் கலை அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நாடார் உறவின் முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு சங்க பொருளாளர் டி.ஆர்.சுரேஷ் குமார், கோவில் தர்மகர்த்தா மாரியப்பன், செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக் கதிரவன் கலந்து கொண்டு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ் (கிழக்கு), சபாபதி (மேற்கு), நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாடார் நடுநிலைபள்ளி செயலாளர் கண்ணன் வரவேற்று பேசினார். எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி செயலாளர் எஸ். கண்ணன் நன்றி கூறினார்.