கொரோனா பரவல் குறைய வேண்டி கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபடும் கிராம மக்கள்

கர்நாடகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை மிக தீவிரமாக உள்ளது.

Update: 2021-06-02 16:13 GMT
கர்நாடகம்,

 கடந்த மாத தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 50 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. தற்போது ஊரடங்கு உள்ளிட்ட அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் முற்றிலும் விலகவும், பரவல் குறையவும் ராய்ச்சூரில் ஒரு கிராம மக்கள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வருகிறார்கள். ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகா ஹெக்கததின்னி கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். கொரோனா பரவல் அந்த கிராமத்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் அந்த கிராம மக்கள், கொரோனா பரவல் குறையும், நோய் முற்றிலும் விலகவும் அங்குள்ள நந்த தீப மாரம்மா கோவிலில் சிறப்பு பூஜை செய்ய முடிவு செய்தனர். அதன்படி 16 நாட்கள் அங்கு பூஜை செய்ய முடிவு செய்யப்பட்டது. தினமும் ஒவ்வொரு குடும்பத்தினர் அந்த கோவிலில் பூஜை செய்து வழிபட வேண்டும். அதன்படி தினமும் ஒவ்வொரு குடும்பத்தினரும் நந்த தீப மாரம்மா கோவிலுக்கு சென்று பாலாபிஷேகம் செய்து வழிபட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்