வேலூரில் மேலும் 7 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு
வேலூரில் மேலும் 7 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொற்று பாதித்து குணமடைந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது. ஸ்டீராய்டு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளை இந்த நோய் எளிதில் தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை நோய் பாதித்தவர்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 15 பேர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் பிற மாவட்டம், பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதிப்பு 72 ஆக இருந்தது. தற்போது மேலும் 7 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது. அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.