திருமணம் செய்ய மறுத்ததால் போலீசில் புகார் அளிக்கப்போவதாக மிரட்டிய பெண்ணை கொன்று உடல் புதைப்பு வாலிபர் கைது
திருமணம் செய்ய மறுத்ததால் போலீசில் புகார் அளிக்கப்போவதாக மிரட்டிய பெண்ணை கொலை செய்து உடலை புதைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
மும்பை,
ஜார்க்கண்டை சேர்ந்த பெண் ஒருவர் 21 வயது வாலிபருடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக குடித்தனம் நடத்தி வந்தார். இந்த நிலையில் அப்பெண் தன்னை திருமணம் செய்யும் படி வாலிபரை வற்புறுத்தி வந்தார். மேலும் அவசர தேவைக்காக அப்பெண்ணிடம் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வாங்கி இருந்தார்.
இந்தநிலையில் அந்த பெண் தன்னை திருமணம் செய்ய வாலிபரிடம் மீண்டும் வற்புறுத்தினார். இல்லையெனில் போலீசில் புகார் அளிக்கப்போவதாக மிரட்டினார். தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் சம்பவத்தன்று, அப்பெண்ணை கொலை செய்து உடலை பாந்திராவில் உள்ள இடுகாட்டில் புதைத்து விட்டு தலைமறைவாகி விட்டார்.
இதுபற்றி அறிந்த பாந்திரா போலீசார் அவரை பிடிக்க விசாரணை நடத்தினர். இதில் அவர் ெசாந்த ஊருக்கு தப்பி செல்ல ரெயில் நிலையம் சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் கொலை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.