எட்டயபுரத்தில் போலீசார் சோதனை; ஊரடங்கை மீறிய 25 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்

எட்டயபுரத்தில் ஊரடங்கை மீறியதாக 25 மோட்டார்சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-02 13:23 GMT
எட்டயபுரம், ஜூன்:
தளர்வுகளற்ற முழு ஊரடங்கையொட்டி எட்டயபுரம் பஜார் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், இதனால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயமும் இருப்பதாக காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில் போலீசார் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று காலை முதலே கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.
எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது, சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துவிஜயன், பொன்ராஜ் மற்றும் போலீசார் இப்பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களிடம் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினர். மேலும், உரிய காரணமின்றி வந்தவர்களிடம் இருந்து 25 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். அதே போல், முக கவசம் அணியாமல் வந்த 30 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்