ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மோதி தொழிலாளி பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மோதியதில் தொழிலாளி பலியானார்.;

Update: 2021-06-02 06:59 GMT
ஸ்ரீபெரும்புதூர்,

திருவண்ணாமலை மாவட்டம் புதபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவரது மனைவி மலர் (34). கணவன், மனைவி இருவரும் மொபட்டில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செட்டிபேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர் குப்பம் என்னும் இடத்தில் செல்லும்போது வேகமாக வந்த லாரி முருகன் ஓட்டிவந்த மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் முருகன், மலர் இருவரும் தூக்கி விசப்பட்டனர். முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த அவரது மனைவி மலரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்