பூஜை அறையில் தீபாராதனை காட்டியபோது பரிதாபம் - சேலையில் தீப்பிடித்து பெண் சாவு
தீபாராதனை காட்டியபோது சேலையில் தீப்பிடித்து பெண் பரிதாபமாக இறந்தார்.
மீஞ்சூர்,
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த ராமாரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஹேமச்சந்திரன். இவரது மனைவி சந்திரவதனா (வயது 68). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீட்டில் சாமி அறையில் பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது தீபாராதனை தட்டில் எரிந்து கொண்டிருந்த கற்பூரம் கீழே விழுந்து அவரது சேலையில் தீப்பிடித்தது.
இதில் காயம் அடைந்த அவரை சென்னை வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.