ஆத்தூரில் இருந்து சேலத்துக்கு பயணிகள் இல்லாமல் புறப்பட்ட ரெயில்

ஆத்தூரில் இருந்து சேலத்துக்கு பயணிகள் இல்லாமல் ரெயில் புறப்பட்டு வந்தது.

Update: 2021-06-01 21:54 GMT
ஆத்தூர்:
கொரோனா பரவல் காரணமாக ரெயில்கள் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் நலனுக்காக ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால் ரெயில்வே நிர்வாகத்தினர் சிறப்பு ரெயில்களையும் குறிப்பிட்ட நாட்களுக்கு ரத்து செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் விருத்தாசலத்தில் இருந்து ஆத்தூர் வழியாக நேற்று முதல் சேலத்துக்கு ரெயில் இயக்கப்பட்டது. அந்த ரெயில் நேற்று காலை 7.30 மணிக்கு ஆத்தூர் ரெயில் நிலையத்துக்கு வந்தது. ரெயிலில் பயணிகள் யாரும் வரவில்லை. இதனால் ஆத்தூர் ரெயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அதே போல ரெயிலில் சேலம் செல்ல பயணிகள் யாரும் ஏறவில்லை. இதனால் பயணிகள் இல்லாமலேயே ஆத்தூரில் இருந்து அந்த ரெயில் சேலத்துக்கு புறப்பட்டு வந்தது. ரெயிலில் ரெயில்வே அலுவலர்கள் மட்டும் பயணம் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்