சேலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சேலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.
சேலம்:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த சில மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் விலையை நிர்ணயம் செய்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.
சேலத்தில் நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டர் 96.19-க்கும், டீசல் லிட்டர் 90.34-க்கும் விற்கப்பட்டது. இ்ந்த நிலையில் நேற்று பெட்ரோல் 23 காசும், டீசல் 22 காசும் உயர்ந்தது. அதன்படி நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.42-க்கும், டீசல் 90.56-க்கும் விற்பனையானது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.3.56-ம், டீசல் லிட்டருக்கு ரூ.4.37-ம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.