சிவகிரி அருகே மாவட்ட எல்லையில் முள் போட்டு ரோடு மூடல்

சிவகிரி அருகே மாவட்ட எல்லை பகுதியில் உள்ள ரோடுகளை முள் போட்டு பொதுமக்கள் மூடி உள்ளனர்.

Update: 2021-06-01 21:34 GMT
கொரோனா தடுப்பு பணிகள்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டு உள்ளது. 
மாவட்டத்தின் கிராம பகுதிகளில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சிவகிரி பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதனால் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு அத்தியாவசிய தேவையில்லாமல் ரோட்டில் வாகனங்களில் சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன்,  வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகிறார்கள். 
ரோடு மூடல்
மேலும் சிவகிரி பகுதிக்கு அருகில் உள்ள திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து பலர் வாகனங்களில் வந்து செல்கிறார்கள். எனவே வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் சிவகிரி பகுதிக்கு வருவதை தடுக்க மாவட்ட எல்லைகளை மூட அந்தந்த பகுதி ஊராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. 
குறிப்பாக சிவகிரி அருகே அஞ்சூர் ஊராட்சிக்கு உள்பட்ட சொரியம்பாளையம் பகுதியில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட எல்லைகள் உள்ளது. இங்கு நொய்யல் ஆற்றின் குறுக்கே தரைப்பாலங்கள் வழியாக அவ்வப்போது வாகனங்களில் பலர் வந்து சென்றனர். இதை தடுக்கும் வகையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தரைப்பாலங்கள் உள்ள ரோட்டின் குறுக்கே முள் போட்டு மூடப்பட்டது. 

மேலும் செய்திகள்