நெல்லையில் மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அலுவலகம் முன்பு மருத்துவக்கல்லூரி இறுதி ஆண்டு அரசு சாரா பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாணவர் பிலிப் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
பட்டமேற்படிப்பு காலத்தினை நீட்டிப்பு செய்யாமல் அனைத்து அரசு சாரா பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களை முதுநிலை குடியிருப்பு மருத்துவர்களாக, அரசு உதவி மருத்துவராக கலந்தாய்வு மூலம் பணி நியமனம் செய்ய வேண்டும். மாணவர்களின் அந்தந்த பணிக்காலத்தை முதுநிலை குடியிருப்பு பணிக்காலத்தில் சேர்த்தும் அதற்கேற்ப ஊதியத்தொகையும், சலுகைகளும் வழங்கிட வேண்டும். கொரோனா கால பணியை இரண்டு ஆண்டு கட்டாய சேவைக்குள் சேர்த்துக்கொள்ள வேண்டும். இறுதியாண்டு தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதால் தேர்வு நடத்தும் சூழல் ஏற்படுமாயின் குறைந்தது 4 வாரங்கள் முன்னதாக தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.