ரத்த தான முகாம்
பிரதமர் மோடி பதவி ஏற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பழனியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
பழனி:
பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்று, 7 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி பாரதீய ஜனதா மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் பழனியில் ரத்த தான முகாம் நடந்தது.
முகாமில், 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் திருமலைசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில், விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.