முட்டை சாப்பிட ஆர்வம் காட்டும் அசைவ பிரியர்கள்

ஊரடங்கு காரணமாக இறைச்சி கடை மூடப்பட்டதால், அசைவ பிரியர்கள் முட்டை சாப்பிட ஆர்வம் காட்டுகின்றனர்.

Update: 2021-06-01 20:53 GMT
திசையன்விளை:
கொரோனா ஊரடங்கு காரணமாக, ஆடு, கோழி இறைச்சி, மீன், கருவாடு கடைகள் உள்பட அனைத்து அசைவ கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் அசைவ பிரியர்களுக்கு தற்போது முட்டை மட்டுமே கிடைக்கிறது. இதனால் அவர்கள் அதை வாங்கி சாப்பிட ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக திசையன்விளை பகுதியில் முட்டை விற்பனை சூடு பிடித்துள்ளது. 
நடமாடும் கடை வியாபாரிகள், மொத்த வியாபாரிகளிடம் இருந்து முட்டை ஒன்றுக்கு ரூ.5-50 கொடுத்து வாங்குகின்றனர். அதை ரூ.7 முதல் ரூ.9 வரை விற்பனை செய்கின்றனர். அந்த விலையையும் பொருட்படுத்தாமல் முட்டையை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்