பேரையூர்
பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் மொட்ட மலைப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மொட்டமலை பின்புறமுள்ள பனந்தோப்புகளில் மேலப்பட்டியை சேர்ந்த நடராசன் (வயது 61), கோவிந்தராஜ்(42), மாரிச்சாமி(46) ஆகியோர் விற்பனை செய்வதற்காக பனங்கள் வைத்திருந்தனர். ரோந்து சென்ற போலீசார் அவற்றை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.