அறுவடை செய்யப்பட்ட பருத்தியை விற்க ஏற்பாடு
இளையான்குடி, மானாமதுரை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அறுவடை செய்யப்பட்ட பருத்தியை விற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.
சிவகங்கை,
இளையான்குடி, மானாமதுரை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அறுவடை செய்யப்பட்ட பருத்தியை விற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.
பருத்தி ஏலம்
சிவகங்கை மாவட்டத்தில் பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்களின் பருத்தியை தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் இயங்கும் மானாமதுரை மற்றும் இளையான்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் மூலம் விற்பனை செய்யலாம். பருத்தி விற்பனை மறைமுக ஏலம் மூலம் நடைபெற இருக்கின்றது. இந்த ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் நடைபெறும் மறைமுக ஏலத்தில் எவ்வித கமிஷனோ, தரகோ இல்லை. எனவே, விவசாயிகள் தங்களது பருத்தியை இளையான்குடி மற்றும் மானாமதுரை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு அதிக விலை பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
குறைந்த வாடகை
மேலும் தங்களின் விளைபொருட்களுக்கு குறைந்த வாடகையாக குவிண்டாலுக்கு ஒரு நாளைக்கு 10 பைசா வீதம் வாடகைக்கு அனுமதிக்கப்படுகிறது. பருத்தி ஏலம் தொடர்பாக விவசாயிகள் 9786269851, 9698472981 மற்றும் 9626860392 என்ற எண்களை தொடர்பு கொண்டு விவரம் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..