மணல் அள்ளிய எந்திரம் பறிமுதல்
மணல் அள்ளிய எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே வன்னிவயல் பகுதியில் அனுமதி யின்றி மணல் அள்ளுவதாக ஹலோ போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் டிராக்டருடன் மணல் அள்ளியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் அங்கு நின்ற பொக்ைலன் எந்திரத்தை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தெற்குவாணிவீதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை தேடிவருகின்றனர்.