தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ரெயில்கள் மீண்டும் இயக்கம்; மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் மீண்டும் ஓடத்தொடங்கியது

திருச்சியிலிருந்து சென்னைக்கு மீண்டும் தனது பயணத்தை நேற்று முதல் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் ஓடத் தொடங்கியது. இதேபோல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது மேலும் சில ரெயில்களும் பயணத்தை தொடங்கியது.

Update: 2021-06-01 19:01 GMT

திருச்சி, 
திருச்சியிலிருந்து சென்னைக்கு மீண்டும் தனது பயணத்தை நேற்று முதல் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் ஓடத் தொடங்கியது. இதேபோல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது மேலும் சில ரெயில்களும் பயணத்தை தொடங்கியது.
ரெயில்கள் ரத்து
கொரோனா பரவல் காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும், பயணிகளின் வரத்து குறைவாக இருந்து ஒரு சில ரெயில்களின் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் சிறப்பு ரெயில்களாக கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்பட்டன.

தற்போது கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் ரெயில் மற்றும் விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படவில்லை. இருப்பினும் 20 சதவீதத்துக்கும் குறைவான பயணிகளில் உள்ள ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. திருச்சி கோட்டத்தில் திருச்சியில் இருந்து சென்னை வரை செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், திருச்சியில் இருந்து பாலக்காடு வரை செல்லும் சிறப்பு ரெயில் உள்பட சுமார் 30-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்

இந்தநிலையில் கடந்த மாதம் 8-ந்தேதி தேதியில் இருந்து கடந்த 31-ந்தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்த ரெயில்கள் அனைத்தும் நேற்று முதல் வழக்கம் போல இயக்கப்பட்டன. அதன்படி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 02654), மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வழியாக கோவை வரை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 02083). திருச்சியில் இருந்து பாலக்காடு வரை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்:06843), தஞ்சையில் இருந்து சென்னை வரை செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 06866), திருச்சியில் இருந்து மன்னார்குடி வரை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07408) மற்றும் புதுவையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06861)
மீண்டும் இயக்கம்
மேலும், காரைக்குடி- சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில், ராமேஸ்வரம்- கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:06617), மதுரை- விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ெரயில் (வண்டி எண்:06868) இன்று (புதன்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளன. திருச்சி கோட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில்களில் சுமார் 10 ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.

மேலும் செய்திகள்